சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.