கொல்கத்தா: மேற்கு வங்க மாநில டி.ஜி.பி.யாக இருந்த ராஜீவ்குமாரை நீக்கி தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து விவேக் சகாய் என்பவரை புதிய டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது. அவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் விவேக் சகாயை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவருக்குப் பதிலாக சஞ்சய் முகர்ஜியை புதிய டிஜிபியாக நியமிக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உத்தரவிட்டது. விவேக் சகாய் நியமனம் அவரது பணி மூப்பு அடிப்படையில் அமைந்தது. ஆனால் அவர் மே இறுதி வாரத்தில் ஓய்வுபெற உள்ளதால், புதிய டிஜிபியாக சஞ்சய் முகர்ஜியை தற்போது நியமிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 1989ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான முகர்ஜி, மேற்கு வங்க அரசு டிஜிபி பதவிக்கு பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளின் பட்டியலில் இரண்டாவது நபராக இருந்தார். அவர் உடனடியாக அதாவது நேற்று மாலை 5 மணிக்குள் புதிய டிஜிபியாக பதவி ஏற்றார்.
மேற்குவங்க புதிய டிஜிபி 24 மணி நேரத்தில் நீக்கம்: இன்னொருவரை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி
118