சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 56 கனஅடியில் இருந்து 166 கனஅடியாக அதிகரித்துள்ளது.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 1,909 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 கனஅடியில் இருந்து 71 கனஅடியாக அதிகரித்துள்ளது.