ராமேஸ்வரம்: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 199 கனஅடியில் இருந்து 153 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது. குடிநீருக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால் 47.67 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 1,698 மில்லியன் கனஅடியில் இருந்து 1,702 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது
189
previous post