போக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி4 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு மோட்டார் மற்றும் 2 மோட்டார் வேரியண்ட்களில் வருகிறது. ஒரு மோட்டார் வேரியண்டில் 58 கிலோவாட் பேட்டரி இடம் பெற்றிருக்கும். 2 மோட்டார் வேரியண்ட்டான ஐடி4 ஜிடிஎக்ஸ்-ல் 77 கிலோவாட் பேட்டரி இடம் பெறும். இரண்டு மோட்டார் வேரியண்டில் முன்புற மோட்டார் அதிகபட்சம் 110 பிஎச்பி பவரையும், 162 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பின்புறம் பொருத்தப்பட்ட மோட்டார் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 479 கி.மீ தூரம் வரை செல்லும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில்தான் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.