Sunday, May 12, 2024
Home » எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் கடும் உயர்வு: அமெரிக்கா அரசு அறிவிப்பு

எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் கடும் உயர்வு: அமெரிக்கா அரசு அறிவிப்பு

by Ranjith

வாஷிங்டன்: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான எச்-1பி,எல்-1 மற்றும் ஈபி-5 போன்ற பல்வேறு வகை குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எச்-1பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும்.

புதிய எச்-1பி விண்ணப்ப விசா கட்டணம், படிவம் I-129, 460 டாலரில் இருந்து 780 டாலர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எச்-1பி பதிவு கட்டணம் 10 டாலரில் இருந்து 215 டாலராக ஆக உயரும். இது மட்டும் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்.எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 460 டாலரில் இருந்து 1,385 டாலர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் விசாக்கள் என்று பிரபலமாக அறியப்படும் ஈபி-5 விசாக்கள் 3,675 டாலரில் இருந்து 11,160 டாலராக உயர்த்தப்படுவதாக அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi