சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு மாநில இணை செயலாளர் நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பாஜ கட்சியில சரத்குமார் சேர்ந்த டீலிங் தெரியுமா? சரத்குமார் கட்சியில சேரப் போகும்போது நோட்டு எவ்வளவு? சீட்டு எவ்வளவுன்னு அண்ணாமலைகிட்ட கேட்டிருக்காரு. அண்ணாமலையோ உங்க கட்சி எவ்வளவுன்னு கேட்க, அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடிச்சுப்போக விருதுநகர நான் வச்சுக்கிறேன்.
கட்சிய நீங்க வச்சுக்கோங்கன்னுட்டாரு… மறுநாள் மனைவியை அழைச்சுக்கிட்டு அண்ணாமலை வீட்டுக்குப் போயிருக்காரு சரத்குமார். கட்சிய இணைச்சுட்டு ரெண்டு பேரு மட்டும் வந்திருக்கீங்கன்னு கேட்டாரு… நாங்க ரெண்டு பேரும் தான் கட்சின்னாராம் சரத்குமார். இதெல்லாத்தையும் விட டிடிவியும் ஓபிஎஸ்சும் பாஜகிட்ட அசிங்கப்பட்டு போனாங்க. எனக்கு ஒரு சீட்டு போதும் என்று சொன்ன டிடிவிக்கு ரெண்டு வச்சுக்கங்கன்னுட்டு. எப்படி இருந்த ஓபிஎஸ் பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தைன்னு போயி ஒரு சீட்ட வாங்கி அவரே நிக்கிறாரு’’ என்று பேசினார்.