Sunday, May 5, 2024
Home » வைரலோ வைரல்

வைரலோ வைரல்

by Porselvi

விஜய் நடிக்கும் 68வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘பார்டி ஒன்னு தொடங்கட்டுமா’ என தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் ஆரம்பத்தில் ‘கேம்பைனை தான் தொடங்கட்டுமா’…மைக்க கையில் எடுக்கட்டுமா’ என வரும் வரிகள் தேர்தல் குறியீடாக மாறி எங்கும் டிரெண்டிங்கில் இருந்தது. மேலும் பாடலின் விசில் போடு ‘என வரிகள் வருவதும், இணைய ஐபிஎல் டிரெண்டிங்கிலும் இணைந்திருக்கிறது. ஒரு புறம் கலவையான விமர்சனங்களும் பாடலுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

விடுமுறை கொடுக்காவிடில் புகார் !

மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வந்தன. எங்கும் எதிலும் தேர்தல் மயம், என்கையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வழங்கியது. தேர்தலில் வாக்களிக்க விடுமுறை தரவில்லை எனில் புகார் அளிக்கலாம் என அறிவித்ததும் எங்கும் மீம்ஸ்கள், மேலும் அது குறித்த கலந்துரையாடல்கள், விவாதங்கள் என பிரச்சாரங்களுக்கு நிகராக இந்த அறிவிப்புகள் தூள் பறந்தன. சென்ற வாரம் முழுக்கவே சுற்றிய தேர்தலும் நிமித்தமும்தான் இந்திய டிரெண்ட் எனலாம்.

 

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi