நெல்லை :நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே புதுச்சேரி உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.