உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மேலும் தாமதமாகலாம் என்று மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாறைச் சரிவில் சுரங்கப் பாதையில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். ஏற்கனவே 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மீட்புப் பணி மேலும் 3 நாட்கள் தாமதமாகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உத்தராகண்டின் உத்தர்காசியில் மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 4.5 கி.மீ. நீள சாலைப் பணி நடந்து கொண்டு இருந்தபோது 150 கி.மீ. நீளப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்து வழி மூடிவிட்டது.