சென்னை: இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்காக தவம் கிடக்கிறது பாஜக என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?. பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.