லக்னோ: உ.பி.யில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்று சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் அமீக் ஜமெயி தெரிவித்துள்ளார். காங். தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும் தொண்டர்கள் உழைப்பால் பாஜகவை உ.பி.யில் தோற்கடிப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் இருந்தே பாஜகவை காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி கூட்டணி துடைத்தெறியும் என அவர் கூறியுள்ளார்.