கொழும்பு: திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். உச்சநீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் 3 பேரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பாஸ்போர்ட் வழங்கப்பட்டதை அடுத்து மூவரும் திருச்சி முகாமில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைப்பு..!!
133