சேலம்: சேலம் – ஓசூர் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். தந்தையுடன் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த உதவி பேராசிரியரை பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். உதவி பேராசிரியர் சையது இப்ராஹிம் (57) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.