Thursday, May 9, 2024
Home » சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்

சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்

by Arun Kumar


சென்னை: சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்துள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4 சுற்றுலா கைடுகள், பார்வையாளர்களுக்கு உதவ உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டு அதிலிருந்து கருத்துக்களை புரிந்துகொள்ள சிரமமாக உள்ளது என்று அதனால் எங்களுக்கு சுற்றுலா கைடுகள் நியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகளை நியமனம் செய்துள்ளனர். இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு உதவ உள்ளனர்.

 

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi