சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாதக வேட்பாளர்கள் அறிமுகம். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.