திருவாரூர்: புதிய விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மோட்டா ரகம் பழைய விலை ரூ.2,115 – புதிய விலையாக ரூ.2,265 நிர்ணயம் செய்துள்ளனர். சன்ன ரகம் பழைய விலை ரூ.2,160 – புதிய விலையாக ரூ.2,310 நிர்ணயம் செய்துள்ளனர். திருவாரூரில் 2023 – 2024 பருவத்தில் 350 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. திருவாரூரில் முதல் நாளில் 81 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.