கோவை, திருப்பூர், மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்பியும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு கடைசியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்கம் அடைந்ந நிலையில் கிடந்ததை கண்டு அவ்வழியே சென்ற அவர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி தனது காரிலேயே ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், மயக்கமற்ற அந்த இளைஞரை உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்ததோடு, இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனைக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.