புதுச்சேரி: புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரம் பதிவு செய்தலில், அனுமதியின்றி விளைநிலங்களை பத்திரம் பதிவு செய்து பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இது சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதிகார வர்க்கத்தினர் இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணை செல்ல முடியாது. எனவே இதன் மீது, சிபிஐ விசாரணை நடத்தி அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நில அபகரிப்பு வழக்கில் பாஜ எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஆகியோர் குறுக்கு வழியில் கொள்ளை அடித்த வழக்கில் சிபிஐ தலையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா, யாரால் பாதிக்கப்பட்டார், அவர் மீது தாக்குதல் நடத்திய ஆணாதிக்க சக்தி யார்? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும், என்றார்.
கோயில் நில அபகரிப்பு வழக்கு பாஜ எம்எல்ஏக்களிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் வலியுறுத்தல்
85