திருமலை: தெலங்கானாவில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி ஒருவரை காட்டுப் பகுதி வழியாக 20 கி.மீ. தூரம் ‘டோலியில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஒருவக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. கொத்தகூடம் பகுதியில் போதிய சாலை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ‘டோலி’யில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கட்டிலில் கர்ப்பிணியை படுக்க வைத்து சுமார் 20 கி.மீ. தூரம் தோளில் சுமந்தபடி சத்தியநாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அந்த சுகாதார மையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணியை கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பிறந்தது.
தெலங்கானாவில் சாலை வசதி இல்லாததால் 20 கி.மீ. தூரம் கர்ப்பிணியை ‘டோலியில்’ காட்டு வழியாக சுமந்து சென்ற குடும்பத்தினர்
155