தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் 1 முதல் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தெலங்கானா மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை இன்று காலை துவக்கி வைத்தனர். 3,400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.















