டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்று டாடா பஞ்ச். இதில் மொத்தம் 28 வேரியண்ட்கள் இருந்தன. இதில், அதிகம் விற்பனையாகாத வேரியண்ட்களின் உற்பத்தியை நிறுத்துவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இனி 22 வேரியண்ட்கள் மட்டுமே சந்தையில் கிடைக்கும். பஞ்ச் வரிசையில் கேமோ எடிஷன் நிறுத்தப்பட்டு விட்டது.
இதுபோல், கிரியேட்டிவ் டிடி எஸ் ஆர்-ல் டூயல் டோன் வண்ணங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதன்மூலம், துவக்க நிலை மாடலின் ஷோரூம் விலை சுமார் ₹6.13 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ₹10.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். மேற்கண்ட வேரியண்ட்களில் ஷோரூம் விலை குறைந்த பட்சம் ₹3,000 முதல் ₹13,000 வரை அதிகரித்துள்ளது.