சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ம் நாள் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் திருத்த சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கிறார். சீட்டு நிதி தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்கிறார்.