சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். அரசியல் விஞ்ஞானிகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என அண்ணாமலையின் கருத்துக்கு செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் சேர்ந்து ஓராண்டிலேயே தலைவரான அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவினர் மீது துரும்பை எறிந்தால் கூட பதிலுக்கு இரும்பை வீசுவோம் என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.