தைவான் நாட்டில் ஹூவாலியன் இன்று காலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 என்ற அளவுகோளில் பதிவான நிலநடுக்கம், கடந்த 25 ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய நிலநடுக்கமாககும். இதனால் பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நகரைச் சுற்றியிருந்த மலைப்பாதைகளில் நடைபயணம் மேற்கொண்ட 7 பேர் கொண்ட குழுவில், நிலநடுக்கத்தின் போது 3 பேர் பாறை இடுக்குகளில் சிக்குண்டு உயிரிழந்தனர். இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர நிலநடுக்கம்; 7 பேர் பலி..800 பேர் காயம்..!!


















140