மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு நேற்று 41வது பிறந்த நாள் இதையொட்டி அவர் நண்பர்களை அழைத்து அவர்களுடன் நடனமாடி கொண்டாடி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘ இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நண்பர்களை அழைத்து அவர்களுடன் நடனமாடி கொண்டாடினேன், ஒரு தாயாக என் குழந்தைகளுக்கு நானே கேக் தயார் செய்து கொடுத்தேன். நானே வீட்டில் பலூன் அலங்காரம் செய்தேன்.
பாடல்கள் பாடினேன். எனக்கு பிடித்த பாடல்களுக்கு நடனமாடினேன். பிறந்த நாள் பரிசு என்வென்று கேட்டால் என் கணவரைத்தான் சொல்வேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவர்தான் என் பிறந்த நாள் பரிசு. அவர் இல்லை என்றால் நான் இல்லை. எனது ஒவ்வொரு காலடி தடத்திலும் அவரது பங்கு இருக்கிறது” என்கிறார் சன்னி லியோன்.