Friday, May 10, 2024
Home » சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து

by Ranjith

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.15 மணிவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (17-ம் தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரயில் சேவையாக பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம்12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகளைக் கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

14 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi