சென்னை: கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ராகுல் காந்தை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அவரது பதிவு: மாணவர் ராகுல் காந்த் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்தி பேசுவதும், நம்முடைய நீட் எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான். அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து. நிலையான புகழ். தடைகளை கடந்து படிப்போம், படிப்பால் பெருமையடைவோம், ராகுல் காந்த்தின் பெற்றோருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.