மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிந்து காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.5% வரை குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகள் சரிந்து 71,892 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் குறைந்து 21,666 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.