கொழும்பு: இலங்கையில் பூர்வீக தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1881ம் ஆண்டு 24.9% இருந்த இலங்கை தமிழர்கள் எண்ணிக்கை 2012ல் 11.2% ஆக குறைந்துள்ளது. 1881ம் ஆண்டுடன் இலங்கை தமிழர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது 50% மேல் குறைந்துள்ளது. திரிகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினரானது புள்ளிவிவரம் மூலம் அம்பலமாகியுள்ளது.
திரிகோணமலையில் 1881ல் 64.8% ஆக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012ல் 32.3%ஆக குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 1963ல் 28.8% ஆக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012ல் 17.4%ஆக குறைந்துள்ளது. இனப்பிரச்னையால் நேரிட்ட போர், உயிரிழப்புகள், இடம்பெயர்தல்,அகதிகளாக வெளியேறுதல் உள்ளிட்டவற்றால் தமிழர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் குறையும் தமிழர் எண்ணிக்கை:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தப்படியாக தமிழக மக்கள் தொகை மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது. இலங்கை அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமானது, அவசரமானது: வைகோ கருத்து
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமானது, அவசரமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் பகுதியில் அதிகரித்து வருகின்றன. தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி இந்திய அரசு கவலைப்படவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.