Wednesday, May 15, 2024
Home » ஐசிசி உலக கோப்பை தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை: பந்துவீச்சில் தீக்‌ஷனா அசத்தல்

ஐசிசி உலக கோப்பை தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை: பந்துவீச்சில் தீக்‌ஷனா அசத்தல்

by Francis

ஹராரே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வேயில் நடந்த இந்த தொடரின் சூப்பர் 6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இலங்கை, ஜிம்பாப்வே அணிகள், இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றன. இந்த நிலையில், இரு அணிகளும் தகுதிச்சுற்றின் பைனலில் நேற்று மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச… இலங்கை அணி 47.5 ஓவரில் 233 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

சஹான் அராச்சிகே 57, குசால் மெண்டிஸ் 43, சரித் அசலங்கா 36, ஹசரங்கா 29, நிசங்கா 23, சமரவிக்ரமா 19 ரன் எடுத்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் வான் பீக், ரையன் கிளைன், விக்ரம்ஜித், ஸுல்பிகர் தலா 2, ஆர்யன் தத் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 49 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், அந்த அணி 23.3 ஓவரிலேயே 105 ரன்னுக்கு சுருண்டது.

மேக்ஸ் ஓ தாவுத் 33, வான் பீக் 20*, விக்ரம்ஜித் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் தீக்‌ஷனா 4, மதுஷங்கா 3, ஹரங்கா 2 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்று தகுதிச்சுற்று கோப்பையை முத்தமிட்டது. தில்ஷன் மதுஷங்கா ஆட்ட நாயகன் விருதும், ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

You may also like

Leave a Comment

nineteen + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi