ஸ்கோடா நிறுவனம், குஷக் எக்ஸ்ப்ளோரர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என 2 வேரியண்ட்கள் உள்ளன. 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 1.5 லிட்டர் இன்ஜின் 150 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த கார் மேட்டி கிரீன் வண்ணம் மற்றும் ஆரஞ்ச் ஹைலட்டுடன் தோற்றம் அளிக்கிறது. கிரில், முன்புற பம்பர்கள், போன்றவற்றில் ஆரஞ்ச் வண்ணம் பூசப்பட்டுள்ளது. விங் மிரரர்கள் மற்றும் பேட்ச்கள் கருப்பு வண்ணத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், 10.25 அங்குல தொடுதிரையடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டயல், சன்ரூப், 360 டிகிரி கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளன. விரைவில் விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.