சிவகங்கை: சிவகங்கை அருகே இந்தோ – திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு வகுப்பு விமர்சியாக நடைபெற்றது. சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ – திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் கடந்த 44 வாரங்களாக வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 481 முதல் 485 படை பிரிவை சேர்ந்த 349 வீரர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இதை முன்னிட்டு ஐ.ஜி. அசோக்குமார், டி.ஐ.ஜி. அக்ஸல் சர்மா முன்னிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அப்போது வீரர்கள் தேசிய கொடி முன்பு இன்னுயிரை தந்தும் நாட்டை காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். பல்வேறு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 7 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.