சென்னை: சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி செப்.29-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயலட்சுமி அளித்த புகாரின் அடைப்படையில் 2011-ல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். 2011-ல் அளித்த புகாரை வாபஸ் பெற்ற நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது தொடர்பாக போலீஸ் தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்தது. வழக்கின் தன்மை குறித்து ஆராய நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.