Saturday, July 27, 2024
Home » ஸ்கார்ப்பியோ என்இசட்8 செலக்ட்

ஸ்கார்ப்பியோ என்இசட்8 செலக்ட்

by Lavanya

மகிந்திரா நிறுவனம், ஸ்கார்ப்பியோ என் வரிசையில், புதிய என் இசட்8 செலக்ட் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போதுள்ள என் இசட்8 செலக்ட் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டுக்கு முந்தைய மாடலாகவும், இசட்6க்கு மேலான மாடலாகவும் இருக்கும்.இந்த காரில் அதிகபட்சமாக 203எச்பி திறனை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 175 எச்பி பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் மேனுவல், ஆட்டோமேட்டிக், டீசல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.16.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.18.99 லட்சம். இந்த விலை இசட்8 ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.65 லட்சம் வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதபோல் இசட் 6 மாடலை விட ரூ.69,000 முதல் ரூ.1.68 லட்சம் வரை அதிகம். இந்த கார் ‘மிட்நைட் பிளாக்’ வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இசட் 8 ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள பல வசதிகள் இதில் உள்ளன. இருப்பினும் டயரில் காற்றழுத்தத்தை காட்டும் கருவி, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர் போல்டிங் விங் மிரரர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள் இடம்பெறவில்லை.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi