டெல்லி: அதிமுக விவகாரத்தில் வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சசிகலா தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான சசிகலா 2017ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.