சேலம்: 50 ஆண்டு கால கனவாக இருந்த சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் சேலத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில்தான் 1949-ம் ஆண்டு திமுக உருவானது. திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்