உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் வெப்பம் பதிவாகும் சகாரா பாலைவனத்தில் உள்ள அவுல் சாஸேட் நகரில் கடந்த 21ம் தேதி மாரத்தான் போட்டி தொடங்கியது. மொத்தம் 6 சுற்றுகளுடன், 251 கி.மீ. பந்தைய தொலைவை இடைவெளியை தவிர்த்து 6 நாட்களில் கடப்பது போட்டியின் விதியாகும். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். ஆடவர் பிரிவில் 3 சுற்றுகள் முடிவில் உள்ளூர் நட்சத்திரங்களான எல் மொராபிட்டி சகோதரர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ராசைட் எல் மொராபிட்டி முதல் மற்றும் 3ம் சுற்றில் வாகை சூடி முதல் இடத்தில் உள்ளார். டெஸ் சாப்லேஸ் மாரத்தான் மகளிர் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ராக்னா டேபட்ஸ், சுயன்று அடிக்கும் பாலைவனக் காற்றில் மணல் மேடுகள், மலை முகடுகளை கடந்து 3வது சுற்று நிறைவில் முதல் இடத்தில் உள்ளார்.














சகாரா பாலைவனத்தில் டெஸ் சாப்லேஸ் மாரத்தான் தொடர்: சுயன்று அடிக்கும் பாலைவனக் காற்றில் 251 கி.மீ. பந்தய தொலைவு நிர்ணயம்..!!
Published: Last Updated on