பல துறைகளிலும் சாதனை படைத்து இந்தியாவின் அடையாளங்களாக விளங்கும் பிரபலங்களுக்கு, ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளையும் நேரில் கண்டு களிக்கும் வகையில் கிரிக்கெட் வாரியம் ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கி கவுரவித்து வருகிறது. இதையொட்டி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கிய பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இத்தகவலை X சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.