சியோல்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாடு திரும்பினார். கடந்த செவ்வாய்க்கிழமை உயர் பாதுகாப்பு கொண்ட தனி ரயில் மூலம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அவர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவில் உள்ள முக்கிய ராணுவ தளங்கள், அவற்றின் தொழில்நுட்ப செயல்பாட்டு வளாகங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். நேற்று கிம் ஜோங் உன் பயணம் முடிந்ததையடுத்து அவருக்கு ரஷ்யாவில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டார். அவர் ரயில் மூலம் வடகொரியா புறப்பட்டுச் சென்றார்.