Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 2 கலவர வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, கலவரம் உள்பட 200 வழக்குகளை அந்த நாட்டு அரசு பதிவு செய்துள்ளது. ஊழல் வழக்கில் அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் நடந்த கலவரம் சம்மந்தமான 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து இம்ரான்கான், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, மாஜி தொலை தொடர்பு அமைச்சர் முரத் சயீத் ஆகியோரை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.