Saturday, July 27, 2024
Home » நிவாரணம் தரும் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள்!

நிவாரணம் தரும் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் புதுமைகளை புகுத்தி வரும் எஸ்.கே.எம். சித்தா மற்றும் ஆயுர்வேத நிறுவனம் சார்பில் சமீபத்தில் மருத்துவ மாணவர்களுக்கும் வளர்ந்து வரும் இளம் மருத்துவர்களுக்குமான மருத்துவ கல்வி தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது. வைத்ய அமிர்தம் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், முக்கிய நிகழ்வாக, எஸ்.கே.எம் நிறுவனத்தினர் புதிதாக ஆறு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தினர்.

மருந்துப் பொருட்கள்

கழுத்து எலும்பு தேய்மானம் மற்றும் கழுத்து வலிகளுக்கு – Manyawin forte soft gel
இடுப்பு முதுகு தண்டு வட நோய்கள் மற்றும் வலிகளுக்கு – katiwin soft gel
சினைப்பை நீர் கட்டிகளுக்கு – gunedote softgel capsules
ஃபெலோபியன் டியூப் அடைப்பிற்கு – 0vorex softgel capsules
பாலூட்டும் தாய்மார்களுக்கு – galactowin granuels
தோளில் ஏற்படும் பங்கஸ் பாதிப்பிற்கு – fungiwin Dusting powder

போன்ற ஆறுவகையான புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பொடுகுத் தொல்லை நீங்க…

ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயைத் தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.

இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாவதை நான் பார்த்திருக்கிறேன். கவனமாக இருந்து மனஅழுத்தத்தை குறைத்தால் இது மாறிவிடும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தையிலை தைலம் ஆகியவற்றைத் தேய்ப்பது சிறந்தது.

 

You may also like

Leave a Comment

ten + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi