Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரமலான் விடுமுறையில் இயங்கியது அரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் பலி, 20 பேர் காயம்

சண்டிகர்: அரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி குழந்தைகள் 6 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பேருந்து 30 பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது. இந்த பேருந்து கனினாவில் உள்ள உன்ஹானி கிராமத்துக்கு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். படுகாயமடைந்த 20 குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் குடியோதையில் இருந்ததாக தெரிகிறது.

மேலும் ரமலான் அரசு விடுமுறை தினமான நேற்று தனியார் பள்ளி இயங்கியது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.