பொரித்த பூரிகள் 6,
தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை,
நெய் ஒரு டீஸ்பூன்,
லவங்கம் 6,
டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன்.
செய்முறை:
சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்து விடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும்.