Sunday, June 2, 2024
Home » நடப்பாண்டில் 5-வது முறையாக மார்ச் 22ல் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்!!

நடப்பாண்டில் 5-வது முறையாக மார்ச் 22ல் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாகப் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் மோடி தமிழகம் வருவதாக கூறப்படுகிறது. இந்த முறை அவர் தென்மாவட்டங்களில் குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார். நடப்பு ஆண்டில் 5-வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.

ஜனவரி மாதம் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்திற்கு சென்றார். பிப்ரவரி மாதத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு 28-ந்தேதி குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டில் 4-வது முறையாக பிரதமர் மோடி கடந்த நான்காம் தேதி தமிழகம் வந்தார். ஹெலிகாப்டரில் கல்பாக்கம் சென்று, அதிவேக ஈனுலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாவினி நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலையின் கோர் லோடிங் பணியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை நந்தனம் வந்த அவர், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi