சென்னை: மின்வெட்டு குறித்து சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில சிறிய இடையூறு என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.