திருத்துறைப்பூண்டி, மே 1: திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீராலத்தூர் ஊராட்சியில் உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.