சென்னை: அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அரசியல் அதிகாரத்தை சுயநலனுக்காக பிரச்சனைகளை உருவாக்க பயன்படுத்தக்கூடாது. அதிகாரம் மூலம் மக்களுக்கு மிரட்டல், பிரச்சனையை ஏற்படுத்துவதை நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.