டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் சுந்தரேஷ் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.