டெல்லி: மக்களை பிரித்தாளும் பாஜகவின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், பெரியாரின் தொலைநோக்கும், கொள்கையும் நம்மை வழிநடத்தட்டும். தாங்கள் கடிதத்தில் விளக்கி காட்டியதுபோல் இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி என்பதைவிட மேம்பட்டது என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.